
அதிரடி காட்டும் காவல் துறை… இந்த தவறை செய்தால் இனி 6 மாதம் கம்பி எண்ணணும்… என்னனு தெரியுமா?
மும்பை மாநகர சாலைகளில் தொடர்ந்து கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது காவல் துறையினர் தற்போது கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டுபவர்களை மும்பை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக ராங் சைடில் (Wrong Side) வாகனங்களை இயக்கி, மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோரின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் மீது காவல் துறையின் கவனம் திரும்பியுள்ளது. இத்தகைய நபர்களை பிடிப்பதற்காக சிசிடிவி கேமராக்களை ஆராயும் பணிகளை காவல் துறையினர் தொடங்கியுள்ளனர்.
இந்த அதிரடி நடவடிக்கையை மும்பை காவல் துறையினர் கடந்த ஜனவரி 4ம் தேதி தொடங்கினர். அப்போது முதல் தற்போது வரை ஏராளமான வாகன ஓட்டிகள் காவல் துறையினரின் பிடியில் சிக்கியுள்ளனர். 121 இரு சக்கர வாகனங்கள், 11 மூன்று