மக்களே.. எல்லாரும் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கங்க… ஏன் தெரியுமா? WHO முக்கிய வார்னிங்

டெல்லி: உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள் செவ்வாயன்று ஜெனீவாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, கொரோனா தொற்றுக்கு மத்தியில் அனைவரும் இந்த ஆண்டு காய்ச்சல் தடுப்பூசி பெறுவது மிகவும் முக்கியமானது என்று கூறினார்கள்.

China Corona Vaccine : டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரும் | Oneindia Tamil

கொரோனா வைரஸ் தொற்றுநோய் இன்னமும் கடுமையாக பரவி வரும் சூழலில், பருவ மழையால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களும் அதிகரிக்கக்கூடும். எனவே காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடுவது மருத்துவமனைகள் நெருக்கடிக்கு உள்ளவாதை தவிர்க்க முடியும். அத்துடன், கடுமையான கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக சில பாதுகாப்பை வழங்கவும் இந்த காய்ச்சல் தடுப்பூசி உதவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

SARS-CoV-2 வைரஸால் ஏற்படும் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தோ அல்லது தடுப்பூசியோ இல்லை. உலகளவில் விஞ்ஞானிகள் மற்றும் மருந்து ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வருகிறார்கள். இதேபோல் நோய் தொற்றை சமாளிக்க பல்வேறு அணுகுமுறைகளை ஆராய்ந்து வருகிறார்கள். ஏனெனில் உலகளவில் இதுவரை 774,832 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 196 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் சுமார் 22,580,296 பேருக்கு இதுவரை தொற்று பரவி உள்ளது.

உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பின் மூத்த ஆலோசகர் புரூஸ் அய்ல்வர்ட் பரவலான காய்ச்சல் எதிர்ப்பு தடுப்பூசிகளை வழங்குமாறு உலகை வலியுறுத்தியுள்ளார். இது கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை சிக்கலாக்கும் அபாயத்தைத் தடுக்க உதவும் என்று கூறினார். உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், மக்கள்தொகையில் 10 சதவீதம் பேருக்கு பயங்கரமான கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன என்றார்.

சுவாச நோய்த்தொற்று

சுவாச நோய்த்தொற்று

காய்ச்சலுக்கு எதிராக ஏன் தடுப்பூசி போட வேண்டும்? இன்ஃப்ளூயன்ஸா அல்லது வைரஸ் காய்ச்சல் என்பது தீவிரமான சுவாச நோய்த்தொற்று ஆகும். இது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் மரணத்திற்கும் கூட வழிவகுக்கும். ஆனாலும், ஒவ்வொரு காய்ச்சல் பருவமும் வேறுபட்டது. தொற்று மக்களை வித்தியாசமாக பாதிக்கும். சி.டி.சி படி, பருவ காய்ச்சல் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான மக்களை பாதிக்கிறது, மேலும் பல்லாயிரம் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் ஆயிரக்கணக்கான முதல் பல்லாயிரக்கணக்கான மக்கள் காய்ச்சல் தொடர்பான காரணங்களால் இறக்கிறார்கள்.

இறப்பை குறைக்க அவசியம்

இறப்பை குறைக்க அவசியம்

வருடந்தோறும் வரும் காய்ச்சலிலிருந்து பாதுகாக்கவும் பாதுகாப்பாக இருக்கவும் சிறந்த வழி தடுப்பூசி தான். காய்ச்சல் நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும், மருத்துவமனையில் சேர்வதையும் தடுப்பூசி குறைக்கும். மேலும் குழந்தைகளுக்க காய்ச்சல் தொடர்பான இறப்பு அபாயத்தைக் குறைக்கவும் தடுப்பூசி நன்மையாகவே இருக்கும்,. ஆண்டுதோறும் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட தனிநபர்கள் காய்ச்சல் காரணமாக கடுமையான சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு காய்ச்சல் தடுப்பூசிகள் உடலுக்கு ஆன்டிபாடிகளை உருவாக்க உதவும்.

கொரோனா நோய்

கொரோனா நோய்

தற்போது கொரோனாவுக்கு பாதுகாப்பான தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ இல்லை. எனவே நோய் வாராமல் தடுக்க மக்கள் முககவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். இப்போதைய ஆய்வுகள் சொல்வது என்னவென்றால் காய்ச்சல் தடுப்பூசிகள் சுகாதார அமைப்பின் சுமையை குறைக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றன. காய்ச்சல் தடுப்பூசி பெறுவது கொரோனாவினால் (COVID-19) ஏற்படும் கடுமையான நோய் ஆபத்தை குறைக்க உதவும் என்றும் ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நோய் எதிர்ப்பு மண்டலம்

உதாரணமாக, இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், காய்ச்சல் தடுப்பூசி ஒரு நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தை விரைவாக அடையாளம் கண்டு, நுரையீரலுக்குள் படையெடுக்கும் தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை விரட்டும் என்று தெரியவந்துள்ளது. எனினும் நேரடி விழிப்புணர்வு தடுப்பூசியில் அதிகமாக இருப்பதாகவும், செயலிழக்காத தடுப்பூசியில் (கொல்லப்பட்ட தடுப்பூசி) அல்ல என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். செயலற்ற தடுப்பூசிகள் எப்போதும் நேரடி தடுப்பூசிகளாக வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்காது என்பதே அதற்குக் காரணம்.

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்கள்

காய்ச்சல் தடுப்பூசி யாருக்கு கிடைக்க வேண்டும்?

6 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசிகளை சி.டி.சி பரிந்துரைக்கிறது. இன்ஃப்ளூயன்ஸா சிக்கல்களின் அதிக ஆபத்தில் இருக்கும் நபர்களுக்கு ஒரு காய்ச்சல் தடுப்பூசி மிகவும் முக்கியமானது:

வயதான பெரியவர்கள்

வயதான பெரியவர்கள்

இளம் குழந்தைகள்

நாள்பட்ட நோய் பாதிப்பு உள்ளவர்கள் ( ஆஸ்துமா, சிஓபிடி, உடல் பருமன், நீரிழிவு, புற்றுநோய், சிறுநீரகம் அல்லது கல்லீரல் நோய், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்)

காய்ச்சல் வருவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகி தடுப்பூசி போடலாம்.

இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், ஒரு இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி (காய்ச்சல் தடுப்பூசி) எப்போதும் உங்களைப் பாதுகாக்காது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பாதுகாப்பாக இருப்பதற்கும் காய்ச்சலைத் தடுப்பதற்கும் இது சிறந்த முயற்சியாக கருதலாம்.

Content retrieved from: https://tamil.oneindia.com/news/delhi/who-says-the-world-must-administer-widespread-vaccinations-against-the-flu-this-year-395080.html.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *