திருப்பூரில் பைக் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி.. பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சி

திருப்பூர்: திருப்பூரில் இரு சக்கர வாகனத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.

பெள்ளிகாளிபாளையம் பகுதியில் இன்று சாமிநாதன், பாப்பாத்தி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

 
Tiruppur accident : Three killed in two-wheeler and car collision in Tiruppur

அப்போது அவிநாசியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கொடுவாயில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்று விட்டு காரில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற சாமிநாதன், பாப்பாத்தி ஆகியோர் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் காரும் அதிவேகத்தில் சாலையோரம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். காரில் இருந்த மேலும் 4 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் திருப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed

Content retrieved from: https://tamil.oneindia.com/news/tiruppur/tiruppur-accident-three-killed-in-two-wheeler-and-car-collision-in-tiruppur-393282.html.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *