12 கோடி இந்திய மக்கள் வறுமையில் தள்ளப்படும் அபாயம்.. அதிர்ச்சி கொடுக்கும் புதிய ஆய்வு..!

உலக நாடுகளை ஒட்டுமொத்தமாகத் திருப்பிப் போட்ட கொரோனா, மக்களுக்கும் உயிர் பயத்தையும் தாண்டி கொரோனா-க்கு வாழவும் பயத்தையும் காட்டி வருகிறது என்றால் மிகையில்லை.

வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என வித்தியாசமின்றி அனைத்து நாட்டு மக்களும் விரிக்க முடியாத பல்வேறு விதமான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் வேளையில், இந்திய மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வறிக்கை இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் புதிய பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பணிநீக்கம் மற்றும் வறுமை

பணிநீக்கம் மற்றும் வறுமை

கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்தியாவில் ஏற்கனவே பொருளாதாரப் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், இதோடு இந்தியாவில் சுமார் 13.5 கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளது ஒருமுக்கியமான ஆய்வறிக்கை. இது மட்டும் இல்லாமல் சுமார் 12 கோடி மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் எனவும் இந்த ஆய்வுகள் கூறுகிறது.

தற்போது மக்களின் பயம் எல்லாம் இந்த 13.5 கோடியில் ஒருவராகத் தாம் இருந்து விடக் கூடாது என்பது தான்.

ஆய்வு

ஆய்வு

சர்வதசே மேலாண்மை ஆய்வு நிறுவனமான Arthur D Little நிறுவன அறிக்கையின் படி இந்தியாவில் கொரோனா மூலம் ஏற்பட்டும் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கத்தின் காரணமாக இந்தியாவில் 13.5 கோடி பேர் தங்களது வேலைவாய்ப்பை இழக்கவும், 12 கோடி பேர் வறுமை கோட்டிற்குக் கீழ் தள்ளப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

இது இந்திய சந்தையில் ஏற்படப் போகும் மிகப்பெரிய மாற்றம்.

மாற்றம்

மாற்றம்

இந்த மாற்றத்தின் காரணமாக இந்திய மக்களின் வருமானம் குறைந்து, நுகர்வு பொருட்கள் மற்றும் அளவுகள் குறையும், இதேபோல் செலவுகளைக் குறைந்து கையில் இருக்கும் சிறிய அளவிலான பணத்தைச் சேமிப்பின் பக்கம் திருப்பவே அதிகளவில் முயற்சி செய்வார்கள் எனத் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக நாட்டு மக்களின் தனிநபர் வருமானம் குறைந்து, நாட்டின் ஜிடிபி மற்றும் அதன் வளர்ச்சி அதிகளவில் பாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது Arthur D Little ஆய்வு நிறுவனம்.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

இந்தியாவில் தற்போது கொரோனா-வால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து 91,000 எண்ணிக்கையை நெருங்கி வரும் நிலையில், 2020-21 ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 10.8 சதவீதம் சரிந்து, 2021-22ஆம் நிதியாண்டில் பொருளாதாரம் 0.8 சதவீதமாக வளர்ச்சி அடையும் என Arthur D Little ஆய்வுகள் கூறுகிறது.

அடுத்தச் சில ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் W வடிவ வளர்ச்சியைத் தான் அடையும் எனத் தெரிவித்துள்ளது Arthur D Little அமைப்பு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Content retrieved from: https://tamil.goodreturns.in/news/covid-19-135-million-jobs-loss-push-120-million-people-into-poverty-in-india-018989.html.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *