பொருளாதார சரிவு.. குழந்தைகளுக்கு உதவும் சேவ் தி சில்ட்ரன் அமைப்பு.. நீங்கள் கொஞ்சம் உதவுங்களேன்!

சென்னை: பொருளாதார சரிவு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் குழந்தைகளுக்கு உதவ சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பு களமிறங்கி உள்ளது.

 COVID: Marginalized Children Need Our Support More than Ever Before

கொரோனா வைரஸ் காரணமாக பொது மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ, அதேபோல் உலகம் முழுக்க குழந்தைகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு இதனால் இடையூறு ஏற்பட்டுள்ளது.

 COVID: Marginalized Children Need Our Support More than Ever Before

இந்த லாக்டவுன் காரணமாக குழந்தைகள் தங்களின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களுடன் சரியாக பழக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில் மொத்தம் 39% குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய ஆபத்துகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 COVID: Marginalized Children Need Our Support More than Ever Before

முக்கியமாக கொரோனா காலத்தில் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் குழந்தைகளை கட்டாயமாக பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் மக்கள் இதனால் மோசமாக பாதிக்கப்படுவார்கள். நாம் குழந்தைகளை காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இங்குதான் சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பு களமிறங்கி உதவி வருகிறது.

 COVID: Marginalized Children Need Our Support More than Ever Before

கடந்த ஏப்ரல் 27, 2020 வரை நாடு முழுக்க 3640 வீடுகளில் சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பு மூலம் உணவு பொருட்கள், சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 500க்கும் அதிகமான குழந்தைகளின் வீடுகளில் விட்டமின் ஏ இருக்கும் பால் வழங்கப்பட்டுள்ளது.

 COVID: Marginalized Children Need Our Support More than Ever Before

46000 பேருக்கும் அதிகமானோருக்கு அடிப்படை சுகாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அவர்களின் வீட்டை சுற்றி இருக்கும் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா குறித்தும், அடிப்படை சுகாதாரம் குறித்து சேவ் தி சில்ட்ரன் (Save the Children) விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது .

 COVID: Marginalized Children Need Our Support More than Ever Before

நாம் இப்போதே குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் செயலாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாம் இப்போது செயல்பட வில்லை என்றால் நம்முடைய எதிர்காலம் மோசமாகும். இந்தியாவில் இருக்கும் குழந்தைகள் எல்லோரையும் காக்கும் வகையில் சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பிற்கு உதவிடுங்கள்.

 COVID: Marginalized Children Need Our Support More than Ever Before

இந்த லிங்கை கிளிக் செய்து உடனே உதவி செய்திடுங்கள்

 COVID: Marginalized Children Need Our Support More than Ever Before

Content retrieved from: https://tamil.oneindia.com/news/covid-marginalized-children-need-our-support-more-than-ever-before-385681.html.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *