பிரதமர் மோடியின் ரூ.20 லட்சம் கோடி கணக்கு.. யார் எவ்வளவு ஒதுக்கீடு.. விவரங்கள் இதோ..!

கடந்த வாரத்தில் பிரதமர் மோடி பொருளாதாரத்தினை மீட்டெடுக்க சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இது இந்த திட்டங்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பெரும் வரவேற்பை பெற்றது எனலாம்.

ஆனாலும் இந்த 20 லட்சம் கோடி ரூபாய் சலுகையில், ரிசர்வ் வங்கி கொடுத்த ஊக்குவிப்பு சலுகை மற்றும் நிர்மலா சீதாராமன் அறிவிக்க உள்ள திட்டங்கள் என எல்லாம் சேர்த்து தான் என்றும் கூறப்பட்டது.

ஊக்குவிப்பு சலுகை

ஊக்குவிப்பு சலுகை

இதனைத் தொடர்ந்து கடந்த ஐந்து தினங்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகளை அளித்து வருகின்றார். உலக வங்கியின் தரவுகளின் படி, இந்தியாவின் மொத்த ஜிடிபி விகிதம் 202 கோடி ரூபாயாக உள்ளது. ஆக இந்தியா மொத்த ஜிடிபியில் 10 சதவீதத்தினை தான், பொருளாதார ஊக்குவிப்பு சலுகையாக அளிக்க உள்ளதாகவும் கூறியது. சரி வாருங்கள் பார்க்கலாம், 20 லட்சம் கோடிக்கு கணக்கு என்ன என்று?

நிதி ஒதுக்கீடு விவரம்

நிதி ஒதுக்கீடு விவரம்

முதல் நாள் 5,94,550 கோடி ரூபாய் ஒதுக்கீச் செய்யப்பட்டது.

இதே இரண்டாவது நாளாக 3,10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மூன்றாவது நாளாக 1,50,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதே நான்கு மற்றும் ஐந்தாவது நாளாக 48,100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆக மொத்தம் 11,02,650 கோடி ரூபாய் நிதியினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஐந்து நாட்களாக அறிவித்துள்ளார்.

மற்ற நிதி ஒதுக்கீடு

மற்ற நிதி ஒதுக்கீடு

ரிசர்வ் வங்கி மூலம் 8,01,603 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே முன்னபாக ஏழை எளிய மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையானது 1,92,800 கோடி ரூபாய் என மொத்தம் 9,94,403 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளது. ஆக மொத்தம் நிர்மலா சீதாராமன் மற்றும் ஆர்பிஐ அறிவித்த மொத்த தொகையானது 20,97,053 கோடி ரூபாயாகும்.

கடைசி நாளான இன்று எவ்வளவு யாருக்கு?

கடைசி நாளான இன்று எவ்வளவு யாருக்கு?

மத்திய அரசு இதுவரை மாநிலங்களுக்கு 4,113 கோடி ரூபாயினை வழங்கியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் மாநிலங்கள் கூடுதல் கடன் பெற மா நில அரசுகளுக்கு கடன் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய கடன் வரம்பு மூலம் மாநில அரசுகள் 4.28 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடியும்.

மாநிலங்கள் கடன் பெறும் வரம்பு 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.11,092 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சில பொதுத்துறை நிறுவனங்கள் தவிரித்து மற்றவற்றில் தனியார் முதலீட்டிற்கு அனுமதி. என பல புதிய அறிவிப்ப்புகளை இன்று வெளியிட்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Content retrieved from: https://tamil.goodreturns.in/news/pm-modi-s-rs-20-lakh-crore-economic-package-full-details-018988.html.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *