தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு.. 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள்

சென்னை: தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 25 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அளிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் 3ஆவது முறையாக கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இது இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் 4ஆவது முறையாக புதிய விதிகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Lockdown will be extended upto May 31 in Tamilnadu

அதற்கான விதிமுறைகள் 18-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும்.

ஏனைய 25 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அளிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Content retrieved from: https://tamil.oneindia.com/news/chennai/lockdown-will-be-extended-upto-may-31-in-tamilnadu-385767.html.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *