அமெரிக்காவில் தீ விபத்தில் பெரும் அசம்பாவிதம்.. 11 தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கினர்

லாஸ் ஏஞ்சல்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு பெரிய வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் மின்ன வேகத்தில் பரவியது. இதை அணைக்க முயற்சியின் போது 11 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்காவின் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சனிக்கிழமை மாலை (உள்ளூர் நேரம்) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நகரின் லிட்டில் டோக்கியோ பகுதியில் ஒரு வணிக கட்டிடத்தில் தீ பற்றியது. இந்த மற்ற கட்டிடங்களுக்கு பரவியது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

 
 Los Angeles building fire: More than 10 firefighters injured

ஆனால் தீ பிடிக்க தொடங்கிய இரவு 7.30மணியில் இருந்து அதிகாலை 2.30 மணி வரை தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்தது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது எதிர்பாராதவிதமாக பற்றியது. இந்த விபத்தில் இதுவரை 11 தீயணைப்பு வீர்கள் தீயில் சிக்கி காயம் அடைந்தனர் என்று அமெரிக்காவின் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்த தீயணைப்பு வீரர்களின் நிலை என்ன என்று அறியப்படவில்லை என்று லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் நிக்கோலஸ் ப்ரேஞ்ச் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் சிகிச்சையளிப்பதற்காக மருத்துவனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து மிகப்பெரிய அவரச நிலையை உருவாக்கியிருப்பதாகவும் தீயணைப்பு அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே அவசர சேவை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். எவ்வளவு மோசமான தீ விபத்து என்பது குறித்து லாஸ் ஏஞ்சல் போலிசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் விளக்கியிருப்பது. , தீப்பிடித்ததை எதிர்த்துப் பிரார்த்தனை செய்யுமாறு மக்களை வலியுறுத்தியது. அந்த டுவிட் பதிவில்,. “டவுன்டவுன் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இந்த மிகப்பெரிய தீவிபத்த நடந்துள்ளது. இது அவசர கால சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. பல தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததாக ஆரம்ப அறிக்கைகள் வந்தன. தயவுசெய்து எங்கள் துணிச்சலான லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு வீரர்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed

Content retrieved from: https://tamil.oneindia.com/news/international/los-angeles-building-fire-more-than-10-firefighters-injured-385762.html.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *